"பாலாரிஷ்டம்' என்பது குழந்தைகளைத் தாக்கும் தோஷம். இது கடுமையாக உள்ள குழந்தைகள் மரணத்தைக்கூட தழுவுகின்றன. பிறந்த குழந்தையைப் பறிகொடுக்கும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு.

Advertisment

அவர்கள் அழுது புரளும்போது, இரக்கமற்றவர்கள்கூட அவர்களின்மீது தங்கள் கவலை யைத் தெரிவிப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலை ஏன் ஏற்படுகிறதென்று ஜோதிட சிந்தாந்த வல்லுநர்கள் ஆய்வுசெய்து தந்துள்ளனர்.

"குமார சுவாமியம்' எனும் நூலிலில் இளமையில் மரணம் (பாலாரிஷ்ட தோஷம்) சம்பந்தமாக தெளிவுபடுத்தியுள்ளனர். பாலாரிஷ்ட தோஷம் பொதுவாக பன்னிரண்டு வயதுவரை இருக்கும். சிலருக்கு இருபது வயதுவரைகூட பாலாரிஷ்ட தோஷம் தாக்கும். இருபது வயதுமுதல் முப்பத்திரண்டு வயதுவரை அற்பாயுளும், அதிலிலிருந்து எண்பது வயதுவரை தீர்க்காயுளும் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாலாரிஷ்டம் ஏன் ஏற்படுகிறது- இப்படிப்பட்ட மரணத்துக்குக் காரணமான விவரங்கள் என்னவென்று காண்போம்.

குழந்தை பிறந்ததுமுதல் நான்கு வயது முடியும்வரை தாயினுடைய பூர்வகர்ம தோஷத்தினாலும்; நான்கு வயதுமுதல் எட்டு வயதுவரை தந்தையுடைய பூர்வகர்ம தோஷத்தினாலும் குழந்தைக்கு கண்டம் வருகிறது. எட்டு வயதுமுதல் பன்னிரண்டு வயதுவரை குழந்தையின் பூர்வகர்ம தோஷத் தினால் கண்டம் வருகிறது. இந்த விவரம் "ஜாதக பாரிஜாதம்' நூலிலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisment

பிறந்த குழந்தைகள் நீடித்துவாழ கீழ்க்கண்ட விதங்களில் ஜாதகத்தை நாம் ஆராயவேண்டும். பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் லக்னம் அல்லது மூன்றாம் இடம் அல்லது ஆறாம் இடத்தில் செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஒன்றுகூடியிருந்தால். அக்குழந்தைக்கு சீக்கிரத்தில் ஆயுள் குற்றம் வரும். லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும், ஆறாம் வீட்டில் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் குழந்தைக்குக் கெடுதல் வரும். குழந்தை பிறக்கும்போது தாய்- தந்தையின் மனநிலை மகிழ்ச்சியுடன் இருக்கும். ஆனால் கிரகச் சூழ்நிலை காரணமாக குழந்தையைப் பறிகொடுக்கும் பெற்றோர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே குழந்தை பிறந்த வுடன் தீட்டுநிலை என்று கருத்திற் கொள்ளாமல், கீழ்க்கண்ட எளிய பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.

பரிகாரம்-1

குழந்தை பிறந்தவுடன் அருகிலுள்ள வேப்ப மரத்திலிலிருந்து 27 வேப்பிலை பறித்து, ஒரு வெள்ளைத்துணியில் முடிந்து சாமி படத்துக்குக்கீழ் வைக்கவேண்டும். பிறந்த குழந்தை தீர்க்காயுளோடு வாழவேண்டுமென்று, தினசரி அந்த முடிச்சை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வேண்டவேண்டும். அதனை மீண்டும் அதே இடத்தில் வைத்துக்கொள்ளலாம். 90 நாட்கள் கழித்து அதனை ஏரி அல்லது குளத்தில் போடவேண்டும். (கிணற்றில் போடக்கூடாது).

பரிகாரம்-2

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் தேங்காய் 9, வாழைப்பழம் 18, பாக்கு 18, கதம்பப்பூ 9 முழம் ஆகியவற்றை எடுத்துச்சென்று ஏதாவது ஒரு சனிக்கிழமையில் நவகிரகத்திற்கு அர்ச்சனை செய்திட, குழந்தைப் பருவத்தில் இறக்கும் நிலை மாறும்.

செல்: 94871 68174